உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ஸ்பெயினில் சர்வதேச சுற்றுலா கண்காட்சி அமைச்சர் லட்சுமி நாராயணன் பங்கேற்பு

ஸ்பெயினில் சர்வதேச சுற்றுலா கண்காட்சி அமைச்சர் லட்சுமி நாராயணன் பங்கேற்பு

புதுச்சேரி: ஸ்பெயினில் நடக்கும் சர்வதேச சுற்றுலா கண்காட்சியில் அமைச்சர் லட்சுமி நாராயணன் கலந்து கொண்டார்.ஸ்பெயின் நாட்டின் மாட்ரிட் நகரத்தில் நேற்று சர்வதேச சுற்றுலா கண்காட்சி துவங்கியது. இந்த கண்காட்சியில், புதுச்சேரி அரங்கத்தை அமைச்சர் லட்சுமி நாராயணன் திறந்து வைத்தார்.இந்நிலையில், இந்திய துாதரக தலைமை அதிகாரி தினேஷ் பட் நாயக் கண்காட்சிக்கு வந்தார். அவர் அமைச்சர் லட்சுமி நாராயணன் மற்றும் அதிகாரிகளுடன் உரையாடினார். இதைத்தொடர்ந்து புதுச்சேரி சுற்றுலா மற்றும் கைவினை பொருட்களை மேம்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.இந்த நிகழ்வில் தலைமை செயலர் சரத் சவுகான், அரசு செயலர் ஜெயந்தா குமார் ரே, உதவி இயக்குநர் சுப்ரமணியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த கண்காட்சி வரும், 26,ம் தேதி நிறைவு பெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி