உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / காஞ்சி மாமுனிவர் நிறுவனத்தில் சர்வதேச யோகா தின விழா

காஞ்சி மாமுனிவர் நிறுவனத்தில் சர்வதேச யோகா தின விழா

புதுச்சேரி : லாஸ்பேட்டை காஞ்சி மாமுனிவர் அரசு பட்டமேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது.இதனை முன்னிட்டு 'யோகா சங்கம்' என்ற தலைப்பில் சிறப்பு நிகழ்ச்சி நடந்தது. ஆராய்ச்சி நிறுவனத்தின் பேராசிரியர்கள், அலுவலர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.யோகா பயிற்சியை, சிவராம்ஜி யோகா மைய யோகா குரு ஸ்ரீ ராம சிற்றரசு வழங்கினார். காலை 6:30 மணிக்குத் தொடங்கிய யோகா வகுப்பு, 8:30 மணிக்கு நிறைவு பெற்றது.தொடர்ந்து பேராசிரியர்கள் ராஜேஷ் குமார் சர்மா, பெரியாண்டி ஆகியோர் யோகாவின் சிறப்புகளை எடுத்துரைத்தனர். உடல் அளவிலும் மன அளவிலும் யோகாவால் விளையும் நன்மைகளை விளக்கிப் பேசினர்.மாணவர்களின் மன உறுதிக்கு யோகாசனப் பயிற்சி மிகவும் பயன்படும் என்று எடுத்துரைக்கப்பட்டது. வரலாற்றுத் துறைத் தலைவர் வேல்முருகன் ஒருங்கிணைத்திருந்தார். சமூக ஊடகங்களில் இந்நிகழ்ச்சி நேரலையாக ஒளிபரப்பு செய்யப்பட்டது. ஏற்பாடுகளை பேராசிரியர் குமரேசன் செய்திருந்தார்.காஞ்சி மாமுனிவர் அரசு பட்டமேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநர் கோச்சடை பங்கேற்பாளர்களுக்குச் சான்றிதழை வழங்கி, பாராட்டினார்.கணினித்துறை உதவிப் பேராசிரியர் ராஜாபாதர் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை