சர்வதேச இளைஞர் தினம் நிகழ்ச்சி
புதுச்சேரி: இளையோர் மற்றும் குழந்தைகள் தலைமைத்துவ மையம், தேசிய சேவை திட்டம் இணைந்து புதுச்சேரியில் சர்வதேச இளைஞர் தின விழாவை கொண்டாடினர். இதில், சபரி நர்சிங் கல்லுாரி என்.எஸ்.எஸ்., மாணவர்கள் 'கிரியேட்டத்தான்' நிகழ்ச்சியை நடத்தினர். துவக்க விழாவில்,சபரி நர்சிங் கல்லுாரி முதல்வர் ஜெனஸ்டா மேரி கிசால், துணை முதல்வர் உமா, இளையோர் மற்றும் குழந்தைகள் தலைமைத்துவ மையம் நிறுவனர் சிவா மதியழகன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். இதில், வழக்கறிஞர்கள் சரத்குமார், சினேகா, ஒருங்கிணைப்பாளர் சக்திவேல், கார்த்திக் ஆகியோர் இளைஞர்களுக்கு தேவையான திறன்கள், படைப்பாற்றல், கூட்டு செயல்திறன் ஆகியவை உலகளவில் உள்ள சவால்களை உள்ளூர் நடவடிக்கை மூலம் சமாளிப்பதன் முக்கியத்துவம் பற்றி கூறினர். இதில், மாணவர்கள் 16 குழுக்களாக பிரிந்து உள்ளூர் பிரச்னைகளுக்கான புதுமையான தீர்வுகளை உருவாக்கினர். சிறந்த தீர்வுகளுக்கு பதக்கம், சான்றிதழ் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், மாநில என்.எஸ்.எஸ்., அதிகாரி சதீஷ்குமார், திட்ட ஒருங்கிணைப்பாளர் சரவணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஒருங்கிணைப்பாளர்கள் குணாமுரளி, மீனாட்சி சுந்தரம் ஆகியோர் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர். ஒருங்கிணைப்பாளர் ஆதித்யா நன்றி கூறினார்.