எல்லாமே விலை குறைவு
'தினமலர்' சார்பில் புதுச்சேரி மட்டுமின்றி கடலுார் மற்றும் விழுப்புரம் மாவட்ட மக்கள் பயன்பெறும் வகையில் ஆண்டுதோறும் வீட்டு உபயோக கண்காட்சியை நடத்தி வருகிறது. ஒட்டுமொத்த உற்பத்தி நிறுவனங்களும் தங்களின் பொருட்களை குறைந்த விலைக்கு விற்பனை செய்கின்றன. முதல்வர் ரங்கசாமி கையால் துவக்கி வைத்தால் சிறப்பாக இருக்கும். ஜான்குமார், எம்.எல்.ஏ.,------------------ நியாயமான விலை;'தினமலர்' எக்ஸ்போவில் நடுத்தர மக்களுக்கு தேவையான அனைத்து வகையான வீட்டு உபயோக பொருட்கள் , சிறுவர்களுக்கான விளையாட்டு பொருட்கள், பேக் உள்ளிட்ட அனைத்து பொருட்களும் நியாயமான விலையில் கிடைக்கிறது. கடந்த ஆண்டைவிட இந்தாண்டு எக்ஸ்போ சிறப்பாக உள்ளது. தினமலருக்கு வாழ்த்துக்கள். கல்யாணசுந்தரம், முன்னாள் எம்.எல்.ஏ.,