உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பொதுமக்களை மிரட்டி ரூ. 10 கோடி பறிப்பு சைபர் போலீசார் தகவல்

பொதுமக்களை மிரட்டி ரூ. 10 கோடி பறிப்பு சைபர் போலீசார் தகவல்

புதுச்சேரி: புதுச்சேரியில், பொது மக்களை மிரட்டி, 10 கோடிக்கு மேல், மர்ம கும்பல் பணம் பறித்துள்ளனர் என சைபர் கிரைம் போலீசார் தெரிவித்தனர்.புதுச்சேரியில், தொழில் அதிபர்கள், மருத்துவர்கள், ஓய்வு பெற்ற அரசு அதிகாரிகள், ஐ.டி., கம்பெனியில் வேலை செய்யும் ஊழியர்கள் என பலரை மிரட்டி, மர்ம நபர்கள் பணத்தை பறித்து வருகின்றனர். அதில், பிரபல கொரியர் நிறுவனங்களின் பெயர்களை பயன்படுத்தி, அதில், வெளி நாடுகளில் இருந்து வந்த பார்சலில், போதை பொருட்கள் இருப்பதாக மிரட்டுகின்றனர். போலீஸ் அதிகாரி பேசுவதாகவும், குற்ற வழக்குகள் உள்ளதால், விடுவிக்க பணம் அனுப்ப வேண்டும் என கூறிகின்றனர்.தொலை தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் என்ற பெயரில், போலியான நபர்கள், மொபைல் போன் மற்றும் சமூக வளைதளம் மூலம் தொடர்பு கொண்டு, சிம் கார்டு, ஆதார் கார்டு பல்வேறு சைபர் குற்ற செயல்களில் ஈடுபட்டுள்ளதாக மிரட்டி பணம் பறிக்கின்றனர். இது போன்று, சி.பி.ஐ., அதிகாரி, சைபர் கிரைம் போலீசார் என, பொதுமக்களிடம் தொடர்பு கொண்டு பல்வேறு வகைகளில் பொது மக்களை மிரட்டி, கடந்த ஜனவரி மாதம் முதல், நேற்று வரை, 10 மாதங்களில், 10 கோடிக்கு மேல், மர்ம கும்பல் பறித்துள்ளனர்மர்ம நபர்கள் யாருவது மிரட்டி பணம் கேட்டால், சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தை 1930 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளவும். இத்தகவலை சைபர் கிரைம் போலீசார் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை