உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / குடியரசு தின ஊர்வலத்தில் பங்கேற்க அழைப்பு

குடியரசு தின ஊர்வலத்தில் பங்கேற்க அழைப்பு

புதுச்சேரி: குடியரசு தின ஊர்வலத்தில் பங்கேற்க கலாசார குழுக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கலை பண்பாட்டுத்துறை செய்திக்குறிப்பு:புதுச்சேரியின் முக்கிய வீதிகளில், கலை பண்பாட்டுத்துறை சார்பில், குடியரசு தினம் அன்று மாலை 4:00 மணிக்கு கலாசார ஊர்வலம் நடக்கிறது. இதில் பங்கேற்க கலாசார குழுக்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. அவர்கள், இசைக்கருவிகளுடன் அதற்குண்டான ஒப்பனையுடன் வர வேண்டும்.விண்ணப்பங்கள் இன்று முதல் கலை பண்பாட்டுத்துறை அலுவலகத்தில் கிடைக்கும். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை வரும், 25ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். பங்கேற்க விரும்பும் கலைக்குழுக்கள் விண்ணப்ப படிவங்களை கலை, பண்பாட்டுத்துறை அலுவலகத்தில் நேரிலோ அல்லது https://art.py.gov.in, என்ற இணையதளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்து, விண்ணப்பிக்கலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை