உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ஐ.ஓ.டி., பயன்பாடு: கருத்தரங்கம் நிறைவு

ஐ.ஓ.டி., பயன்பாடு: கருத்தரங்கம் நிறைவு

புதுச்சேரி: புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறை, இந்திய பொறியாளர்கள் நிறுவன புதுச்சேரி கிளை சார்பில், ஐ.ஓ.டி.,யின் பயன்பாடுகள் குறித்த இரண்டு நாள் கருத்தரங்கு நிறைவு விழா நடந்தது.கருத்தரங்கில் புதுச்சேரி, தமிழகம், ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் இருந்து 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் கலந்து கொண்டு, தங்களது படைப்புகள், கண்டுபிடிப்புகள், ஆராய்ச்சி முடிவுகளை சமர்ப்பித்தனர்.சிறந்த கண்டுபிடிப்புகள், படைப்புகளுக்கு பல்கலைக்கழக துணை வேந்தர் மோகன் சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கினார். பேராசிரியர்கள் மனோகரன், ஞானு பிளோரென்ஸ் சுதா, செல்வராஜ், சத்தியமூர்த்தி, தொழில்நுட்ப வல்லுநர்கள் நுாருல் ஹூசைன் மற்றும் அஜித்குமார் ஆகியோர் மாணவர்களுடன் கலந்துரையாடினர்.பேராசிரியர்கள் விவேகானந்தன், இளவரசன், தேன்மொழி, பொறியாளர் மன்ற புதுச்சேரி மாநில தலைவர் திருஞானம், பொருளாளர் சவுந்தரராஜன் வாழ்த்துரை வழங்கினர். பின், ஐ.ஓ.டி., ஏ.ஐ., 5 ஜி மற்றும் டிரோன் தொழில் நுட்பங்கள் இணைவதால் உண்டாக கூடிய சாதக பாதகங்கள், பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் மருத்துவத் துறையில் ஐ.ஓ.டி., தொழில்நுட்பம் சார்ந்த கேள்விகள் குறித்து விவாதிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை