மேலும் செய்திகள்
வேலைவாய்ப்பு முகாம் வரும் 23ம் தேதி ஏற்பாடு
20-Aug-2025
திருக்கனுார் : குமாரப்பாளையத்தில் ஈஷா சார்பில் கிராமப்புற மகளிர் அணிகளுக்கான எறிபந்து போட்டிகள் வரும் 23ம் தேதி துவங்கி இரண்டு நாட்கள் நடக்கிறது. கோயம்புத்துார் ஈஷா யோகா மையம் சார்பில், ஆண்டுதோறும் கிராமப்புற மகளிர்களிடையே விளையாட்டு திறனை மேம்படுத்தும் வகையில் பல்வேறு விளையாட்டு போட்டிகளை நடத்தி வருகிறது. அதன்படி, திருக்கனுார் அடுத்த குமாரப்பாளையம் கிராமத்தில் 2வது ஆண்டாக கிராமப்புற மகளிர் அணிகள் பங்கேற்கும் மாநில அளவிலான எறிபந்து போட்டி, வரும் 23ம் தேதி துவங்கி 2 நாட்கள் நடக்கிறது. இப்போட்டியில், குமாரப்பாளையம், சுத்துக்கேணி, கைக்கிலப்பட்டு, திருக்கனுார், பி.எஸ்.பாளையம், சந்தை புதுக்குப்பம், ஆரோவில், செங்கல்பட்டு, மரக்காணம், திருவண்ணாமலை உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மகளிர் அணிகள் கலந்து கொள்கின்றன. போட்டிகளுக்கான ஏற்பாடுகளை குமாரப்பாளையம் ஸ்போர்ட்ஸ் அகாடமி வீரர்கள் செய்து வருகின்றனர். மேலும், விவரங்களுக்கு சோமசுந்தரம்- 90874 39123 மொபைல் எண்ணை தொடர்பு கொள்ளவும்.
20-Aug-2025