உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / அழகு கலை பயிற்சி சான்றிதழ் வழங்கல்

அழகு கலை பயிற்சி சான்றிதழ் வழங்கல்

புதுச்சேரி : ஈரம் மகளிர் அறக்கட்டளை சார்பில், அழகு கலை பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.முத்தியால்பேட்டை ஈரம் அறக்கட்டளை சார்பில், மகளிர் மேம்பாட்டு திட்டத்தின் கீழ், 42 பேருக்கு தலா 80 ஆயிரம் ரூபாய் மதிப்பில் அழகு கலை பயிற்சி அளிக்கப்பட்டது. பயிற்சி பெற்ற மகளிர்களுக்கு முன்னாள் முதல்வர் நாராயணசாமி, காங்., தலைவர் வைத்திலிங்கம் எம்.பி., வைத்தியநாதன் எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சர்கள் சுப்ரமணியன், கந்தசாமி, காங்., மூத்த துணை தலைவர் தேவதாஸ், ஈரம் அறக்கட்டளை நிறுவனர் ராஜேந்திரன் ஆகியோர் சான்றிதழ்கள் மற்றும் அழகு சாதன பெட்டகம் ஆகியவை வழங்கினர்.மேலும் சுனாமி குறித்து நுால் எழுதிய அமிர்தவள்ளிக்கு பாராட்டு கேடயம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் முத்தியால்பேட்டை வட்டார காங்., தலைவர்கள் ஆனந்த் பாபு, கிருஷ்ணராஜ் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ