உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / சுற்றுச்சூழல் போட்டி சான்றிதழ் வழங்கல்

சுற்றுச்சூழல் போட்டி சான்றிதழ் வழங்கல்

புதுச்சேரி; புதுச்சேரி நகராட்சி சுற்றுச்சூழல் குறித்த போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி, புதுச்சேரி நகராட்சி சார்பில், மத்திய அரசின் ஸ்வச் பாரத் மிஷன் திட்டத்தின் கீழ்,38 அரசு பள்ளிகள், தனியார் பள்ளிகளில் கடந்த 1ம் தேதி முதல் நேற்று வரை, சுற்றுச்சூழல் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.இதில் உலக சுற்று சூழல் பற்றி விழிப்புணர்வு உறுதி மொழி, மரம் நடுவதின் முக்கியத்துவம், நீரை சிக்கனமாக பயன்படுத்துவது, நீர் மாசுபடுவதால் நீர்வாழ் உயிரினங்களுக்கு ஏற்படும் பாதிப்பு, வாகன பயன்பாட்டை குறைத்து, அதன் மூலம் காற்று மாசுபாட்டை குறைப்பது, குப்பைகளை தரம் பிரித்து கொடுப்பது உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.அதன் தொடர்ச்சியாக, புதுச்சேரி ஜெயராணி உயர் நிலை பள்ளி, அமலோற்பம் மேல்நிலைப் பள்ளி, ஒயிட் ஏஞ்சல் பள்ளி மாண வர்களுக்கு பிளாஸ்டிக் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.நகராட்சி ஆணையர் கந்தசாமி முன்னிலையில், பாரதி பூங்கா, சோலை நகர் பூங்காக்களில் 100 மரக்கன்றுகள் நடப்பட்டது. தொடர்ந்து நடந்த சுற்று குழல் பாதுகாப்பு குறித்து கோலப் போட்டியில் பங்கேற்றவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்ச்சியில், வெற்றி பெற்ற மாணவர்களுக்கு உள்ளாட்சித்துறை இயக்குனர் சக்திவேல் பரிசுகளை வழங்கினார். தொடர்ந்து உறுதிமொழி ஏற்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை