உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / அடையாள அட்டை வழங்கல்

அடையாள அட்டை வழங்கல்

புதுச்சேரி:ரோட்டரி கிளப் ஆப் பாண்டிச்சேரி ஆரோசிட்டி சார்பில், புதுச்சேரி வ.உ.சி., அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் விழா நடந்தது. பள்ளி பொறுப்பாசிரியர் பத்மாவதி வரவேற்றார். பள்ளி துணை முதல்வர் சாந்தகுமாரி தலைமை தாங்கினார். ரோட்டரி கிளப் ஆப் பாண்டிச்சேரி ஆரோசிட்டி தலைவர் பாக்யராஜ், துணைத் தலைவர் பாரதி, மூத்த முன்னாள் தலைவர் சிவராமச்சந்திரன், செயற்குழு உறுப்பினர் இளஞ்சேரன் ஆகியோர் மாணவர்களுக்கு அடையாள அட்டை வழங்கினர். ஆங்கில விரிவுரையாளர் கீதா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். விழாவில் விரிவுரையாளர்கள் கந்தசாமி, ஜூடு அன்பழகன் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை