உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மனைப்பட்டா ஆணை வழங்கல்

மனைப்பட்டா ஆணை வழங்கல்

அரியாங்குப்பம்: அரியாங்குப்பம் பகுதியில் மனைப்பட்டா மற்றும் உதவித் தொகை ஆணையை பாஸ்கர் எம். எல்.ஏ., பயனாளிகளிடம் வழங்கினார்.அரியாங்குப்பம் எம்.எல்.ஏ., அலுவலகத்தில், மனைப்பட்டா மற்றும் மாதாந்திர உதவித் தொகைக்கான ஆணை வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. அதில், அரசு நில அளவை மற்றும் பதிவேடு துறை மூலம், அரியாங்குப்பம் சண்முகா நகரில் குடியிருக்கும் 19 நபர்களுக்கு மறு ஒப்படைப்பு செய்யப்பட்ட பட்டா ஆணை மற்றும் வருவாய் துறை மூலம் 9 பேருக்கு தலா ரூ. 30 ஆயிரம் மாதந்திர உதவித் தொகைக்கான ஆணையை எம்.எல்.ஏ., பாஸ்கர் பயனாளிகளிடம் வழங்கினார்.நிகழ்ச்சியில், நில அளவை மற்றும் பதிவேடுகள் துறை இயக்குநர் செந்தில்குமார், வட்டாச்சியர், என்.ஆர்., காங்., பிரமுகர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை