கோவில் சிறப்பு நிர்வாக அதிகாரிக்கு ஆணை வழங்கல்
திருக்கனுார்: சுத்துக்கேணி திரவுபதியம்மன் கோவில் புதிய சிறப்பு நிர்வாக அதிகாரிக்கு அமைச்சர் நமச்சிவாயம் ஆணை வழங்கினார்.மண்ணாடிப்பட்டு தொகுதி, சுத்துக்கேணியில் திரவுபதியம்மன், மாரியம்மன், விநாயகர் கோவில்கள் அமைந்துள்ளது. இக்கோவில்களின் சிறப்பு நிர்வாக அதிகாரியாக சுரேஷ் (எ) பழனிவேல் இந்து அறநிலையத்துறை மூலம் நியமிக்கப்பட்டுள்ளார்.அதற்கான ஆணையை அமைச்சர் நமச்சிவாயம் வழங்கினார். இதில், முன்னாள் எம்.எல்.ஏ., அருள்முருகன், சுத்துக்கேணி பாஸ்கர், பா.ஜ., பிரமுகர் முத்தழகன், முதன்மை கல்வி அலுவலர் குலசேகரன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.