எஸ்.ஐ., பணி ஆணை வழங்கல்
புதுச்சேரி: புதுச்சேரி அரசு காவல் துறையில் புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள சப் இன்ஸ்பெக்டர்களுக்கு பணி ஆணை வழங்கும் விழா கம்பன் கலையரங்கத்தில் நடந்தது. விழாவில் கவர்னர் கைலாஷ்நாதன், முதல்வர் ரங்கசாமி ஆகியோர் கலந்து கொண்டு 58 சப் இன்ஸ்பெக்டர்களுக்கு பணி ஆணைகளை வழங்கினர். நிகழ்ச்சியில், சபாநாயகர் செல்வம், உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், தலைமை செயலர் சரத் சவுகான், டி.ஜி.பி., ஷாலினி சிங், உள்துறை கூடுதல் செயலர் கேசவன், டி.ஐ.ஜி., சத்தியசுந்தரம் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.