உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / நலத்திட்ட கார்டுகள் வழங்கல்

நலத்திட்ட கார்டுகள் வழங்கல்

புதுச்சேரி: லாஸ்பேட்டை தொகுதியில் நாதன் அறக்கட்டளை சார்பில் பொதுமக்களுக்கு நலத்திட்ட கார்டு வழங்கும் விழா நடந்தது. லாஸ்பேட்டை தொகுதியில், நாதன் அறக்கட்டளை சார்பில் 5 ஆயிரம் குடும்பங்களுக்கு மேல் நலத்திட்ட கார்டு மற்றும் அறக்கட்டளையின் உறுப்பினர் கார்டு வழங்கும் பணி நடக்கிறது. இதையொட்டி, 19வது வார்டில் வசிக்கும் பொதுமக்களுக்கு, நலத்திட்ட கார்டு மற்றம் உறுப்பினர் கார்டுகளை நாதன் அறக்கட்டளை நிறுவனர் சாமிநாதன் வழங்கினார். தொடர்ந்து, பூத் வாரியாக தேர்தல் சம்பந்தமான ஆலோசனை கூட்டமும் நடைபெற்றது. இதில், நிர்வாகிகள் நடராஜ், முருகன், வெங்கடேஷ், சுப்ரமணி, சத்தியமூர்த்தி, சுரேஷ், கங்கை அமரன், கார்த்தி, ஆறுமுகம், ஆனந்த், பாபு, தரணி, நடராஜ், தமிழ், குமரேசன், ஜெகதீசன், பாபு, கனகவள்ளி, வள்ளி, வசந்தா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை