உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ஆசிரியர்களுக்கு பணி ஆணை வழங்கல்

ஆசிரியர்களுக்கு பணி ஆணை வழங்கல்

புதுச்சேரி: பள்ளிக்கல்வி துறையில் நேரடி நியமனம் மூலம் தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணையை முதல்வர் ரங்கசாமி வழங்கினார். புதுச்சேரி அரசு பள்ளிக் கல்வி இயக்குனரகத்தின் கீழ் நேரடி நியமனம் மூலம் தேர்வு செய்யப்பட்ட 9 தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கான பணி நியமன ஆணை வழங்கும் விழா முதல்வர் அலுவலகத்தில் நடந்தது. விழாவிற்கு, முதல்வர் ரங்கசாமி தலைமை தாங்கி, ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணையை வழங்கினார். இதில், சபாநாயகர் செல்வம், அமைச்சர் நமச்சிவாயம், பள்ளிக் கல்வி இயக்குனர் பிரியதர்ஷினி ஆகியோர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ