ஜெயின் துறவிகளுக்கு புதுச்சேரியில் வரவேற்பு
புதுச்சேரி: நாடு முழுவதும் பாதயாத்திரை செல்லும் ஜெயின் துறவிகளுக்கு, புதுச்சேரியில் வரவேற்பு அளிக்கப்பட்டது.மத்திய பிரசேத மாநிலத்தில் இருந்து, ஜெயின் சமூகத்தை சேர்ந்த துறவிகள், புரன் சாகர்ஜி, சரஸ்வத் சாகர்ஜி, நமி சாகர்ஜி ஆகிய மூன்று ஜெயின் துறவிகள் நாடு முழுவதும் உள்ள ஜெயின் கோவிலுக்கு பாதயாத்திரையாக சென்று வருகின்றனர்.அதன்படி, மூன்று துறவிகள் நிர்வாண நிலையில், பெங்களூருக்கு வந்தனர். அங்கிருந்து, சென்னைக்கு வந்து, நேற்று காலை புதுச்சேரிக்கு வந்தனர். அவர்களை, ஜெயின் சமூகத்தை சேர்ந்தவர்கள் வரவேற்பு அளித்தனர்.புதுச்சேரியில் உள்ள ஜெயின் கோவில்களுக்கு சென்று, பொதுமக்களுக்கு ஆசி வழங்க உள்ளனர். மேலும், சாரம் பகுதியில் உள்ள ஜெயின் கோவிலில், 5 நாட்கள் தங்கி ஆசி வழங்க உள்ளனர். துறவிகள் குறைந்த அளவு உணவு மற்றும் ஒரு வேளை மட்டுமே உணவு உண்பதும் குறிப்பிட தக்கது.