உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ஜான்குமாருக்கு விரைவில் இலாகா பா.ஜ., தலைவர் ராமலிங்கம் பேட்டி

ஜான்குமாருக்கு விரைவில் இலாகா பா.ஜ., தலைவர் ராமலிங்கம் பேட்டி

புதுச்சேரி: அமைச்சர் ஜான்குமாருக்கு இலாக வழங்காதது உள்ளிட்ட புதுச்சேரி பா.ஜ.,வில் நிலவி வந்த உட்கட்சி பிரச்னைகள் அனைத்தும் விரைவில் சரி செய்யப்படும் என, அக்கட்சியின் மாநில தலைவர் ராமலிங்கம் கூறினார். புதுச்சேரியில் கடந்த சட்டசபை தேர்தலில் என்.ஆர்.காங்., - பா.ஜ., கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. அப்போதே பா.ஜ.,வில் அமைச்சர் பதவி பெறுவதில் போட்டா போட்டி நிலவியது. உச்சகட்டமாக பா.ஜ., தலைமை அலுவலகமே தாக்கப்பட்டது. அந்த பிரச்னை அடங்கிய நிலையில், பதவி கிடைக்காத கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் ஆதரவு சுயேச்சை எம்.எல்.ஏ.,க்கள் வாரிய தலைவர் பதவி கேட்டு கட்சி மற்றும் கூட்டணி தலைமைக்கும் கடும் நெருக்கடி கொடுத்தனர். ஒரு கட்டத்தில், கூட்டணி தலைவரான முதல்வர் ரங்கசாமி, உங்கள் கட்சி அமைச்சர்களிடம் உள்ள துறைகளின் வாரிய தலைவர் பதவிகளை நீங்களே எடுத்துக் கொள்ளுங்கள் என்றார். இருப்பினும், கட்சி தலைமை அசைந்து கொடுக்காததால், அதிருப்தி அடைந்த கட்சி மற்றும் ஆதரவு சுயேச்சை எம்.எல்.ஏ.,க்கள் மறைமுகமாக மாற்று அணியை உருவக்கி செயல்பட்டு வருகின்றனர். இந்நிலையில், கட்சி தலைமை உத்தரவின்படி சாய் சரவணன்குமார் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ததை தொடர்ந்து, ஜான்குமாருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. ஆனால், அவர் பதவி ஏற்று 2 மாதங்களுக்கு மேலாகியும் இலாகா ஒதுக்கப்படவில்லை. இதற்கிடையே கடந்த ஒரு வாரமாக பா.ஜ.,வை சேர்ந்த அமைச்சர் நமச்சிவாயம் மீது, அதே கட்சியை சேர்ந்த சாய்சரவணன்குமார் பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறியதும், இதற்கு நமச்சிவாயம் பதிலடி கொடுத்து வருவது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சட்டசபை தேர்தலுக்கு 5 மாதங்களே உள்ள நிலையில், கட்சியில் தற்போது ஏற்பட்டுள்ள உட்கட்சி விவகாரம் பொதுமக்களிடையே பேசு பொருளாகி உள்ள போதிலும், கட்சி தலைமை நடவடிக்கை எடுக்காமல் இருப்பது, அக்கட்சி நிர்வாகிகளிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து, நேற்று சொசியெத்தே புரோகிரேசீஸ்த் சங்க கூட்டத்தில் பங்கேற்ற பா.ஜ., மாநில தலைவர் ராமலிங்கத்திடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் பதில் அளிக்கையில், புதுச்சேரியில் பா.ஜ., கட்டுக்கோப்பாக உள்ளது. அமைச்சரும், எம்.எல்.ஏ., வும் உணர்ச்சி வசப்பட்டு பேசியுள்ளனர். இப்பிரச்னை குறித்து கட்சி தலைமைக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது. அதன்பேரில், கட்சி விவகாரத்தை பொது வெளியில் பேச வேண்டாம் என இருவருக்கும் கட்சி தலைமை அறிவுரை கூறியுள்ளது. மீறினால், நடவடிக்கை நடவடிக்கை எடுக்கப்படும். புதிய அமைச்சர் ஜான்குமாரை கட்சி கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்து விரைவில் இலாகா வழங்கப்படும். அதற்கான நடவடிக்கையை கவர்னர் மற்றும் முதல்வர் எடுத்து வருகின்றனர்' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி