உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ஜவகர் சிறுவர் இல்லம் கோடைக்கால பயிற்சி முகாம் துவங்கியது

ஜவகர் சிறுவர் இல்லம் கோடைக்கால பயிற்சி முகாம் துவங்கியது

புதுச்சேரி: புதுச்சேரியில் ஜவகர் சிறுவர் இல்லம் மூலம் 9 இடங்களில் கோடைகால பயிற்சி முகாம் துவங்கியது. கோடை விடுமுறையை யொட்டி, பள்ளிக் கல்வி இயக்கத்தின் மூலம் ஜவகர் சிறுவர் இல்லம் குழந்தைகளுக்காக பல்வகைக் கலைகளான பரதம், கிராமிய நடனம், வாய்ப்பாட்டு இசை, வயலின், வீனை, மிருதங்கம், ஓவியம், கைவினை, கிதார், கீபோர்டு, டிரம்ஸ், தேக்வாண்டோ மற்றும் விளையாட்டு (கேரம், செஸ், இறகுபந்து, டேபிள் டென்னிஸ்) ஆகியவற்றைக் கற்பிக்க சிறப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளது. அதன்படி, ஜவகர் சிறுவர் இல்லம், லாஸ்பேட் கோலக்கார அரங்கசாமி நாயக்கர் அரசு நடுநிலைப்பள்ளி, கதிர்காமம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, காலாப்பட்டு, அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, வில்லியனுார் அரசு பெண்கள் நடுநிலைப்பள்ளி, திருவண்டார்கோவில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, பாகூர் அரசு நடுநிலைப்பள்ளி, கரியமாணிக்கம் அரசு நடுநிலைப்பள்ளி, நோனாங்குப்பம் அரசு மேல்நிலைப்பள்ளி ஆகிய 9 இடங்களில் நேற்று துவங்கிய பயிற்சி முகாம் 31ம் தேதி வரை நடக்கிறது. முகாமில், 6 வயது முதல் 16 வயதுள்ள அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள் கலந்துகொள்கின்றனர். மே 4ஓட்டு எண்ணிக்கை நடைபெறுவதால் பயிற்சி முகாமிற்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !