உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / வீராம்பட்டினத்தில் ஜே.சி.எம்., மக்கள் மன்றம் திறப்பு

வீராம்பட்டினத்தில் ஜே.சி.எம்., மக்கள் மன்றம் திறப்பு

புதுச்சேரி : வீராம்பட்டினத்தில்,ஜே.சி.எம். மக்கள் மன்றத்தை, சமூக சேவகர் சார்லஸ் மார்ட்டின் திறந்து வைத்தார். அரியாங்குப்பம் தொகுதி, வீராம்பட்டினம் கிழக்கு தேரோடும் வீதியில் ஜே.சி.எம். மக்கள் மன்றம் நேற்று திறக்கப்பட்டது. சமூக சேவகர் சார்லஸ் மார்ட்டின், குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார். முன்னதாக அவருக்கு மன்றத்தின் நிர்வாகிகள் பட்டாசு வெடித்து வரவேற்பு அளித்தனர். நிகழ்ச்சியில், ஜே.சி.எம். மக்கள் மன்ற தலைவர் ரீகன் ஜான்குமார், வீராம்பட்டினம் கிளை தலைவர் முத்துக்குமரன், மன்றத்தின் நிர்வாகிகள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். அதனை தொடர்ந்து, 50க்கும் மேற்பட்ட மீனவ பெண்களுக்கு மீன் வியாபாரம் செய்யும் அன்னக்கூடை வழங்கினார். பின்னர், அப்பகுதியில் உள்ள பகுதியில் உள்ள செங்கழுநீர் அம்மன் கோவிலில், சாமி தரிசனம் செய்தார். அவர் கூறுகையில், மக்களுக்கு சேவை செய்வதற்காகவே, புதுச்சேரிக்கு வந்துள்ளோம். குடிநீர், வேலை வாய்ப்பின்மை உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் உள்ளது. புதுச்சேரி 25 ஆண்டுகள் பின் தங்கி உள்ளது. நாங்கள் துவங்கிய மன்றத்தின் மூலம் நல்லது செய்வோம். உங்கள் பகுதியில் உள்ள பிரச்னைகளை எங்களிடம் சொல்லுங்கள், எங்களால் முடிந்ததை, நாங்கள் செய்கிறோம். இவ்வாறு அவர் மக்களிடம் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி