பாசிக் ஊழியர்களுக்கு தீபாவளி பரிசு ஜே.சி.எம்., மக்கள் மன்றம் வழங்கல்
புதுச்சேரி: ஜே.சி.எம்., மக்கள் மன்றம் சார்பில், பாசிக் நிறுவன ஊழியர்களுக்கு தீபாவளி பரிசு பொருட்களை தலைவர் ரீகன் ஜான்குமார் வழங்கினார். புதுச்சேரி சார்பு நிறுவனமான பாசிக் வரும் டிசம்பர் 25ம் தேதிக்குள் மூட மூடிவு செய்யப்பட்டுள்ள அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. விரைவில் மூடப்பட உள்ள பாசிக் நிறுவனத்தின் ஊழியர்களுக்கு சமூக சேவகர் சார்லஸ் மார்டின் மூலம் ஜே.சி.எம்., மக்கள் மன்றம் சார்பில், தீபாவளி பரிசாக 5 கிலோ அரிசி, 3 கிலோ சர்க்கரை, பட்டாசு பெட்டி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. தட்டாஞ்சாவடி தனியார் திருமண மண்டபத்தில் நடந்த நிகழ்ச்சியில் ஜே.சி.எம்., மக்கள் மன்ற தலைவர் ரீகன் ஜான்குமார் 300க்கும் மேற்பட்ட பாசிக் ஊழியர்களுக்கு தீபாவளி பரிசு பொருட்களை வழங்கினார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ரீகன் ஜான்குமார், 'இந்த தீபாவளி பாசிக் ஊழியர்களுக்கு கஷ்டமான தீபாவளியாகும். வரும் 2026ம் ஆண்டு இவர்களுக்கு நிச்சயம் ஒரு மாற்றம் உருவாகும். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பாசிக் நிறுவனம் மீண்டும் திறக்கப்படும்' என்றார்.