உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மூதாட்டி வீட்டில் நகை, பணம் திருட்டு

மூதாட்டி வீட்டில் நகை, பணம் திருட்டு

புதுச்சேரி : முத்தியால்பேட்டை வாழைகுளம், நகராட்சி குடியிருப்பை சேர்ந்தவர் பூரணி, 61. இவர் அப்பகுதியில் ஏலச்சீட்டு மற்றும் தீபாவளி சீட்டு நடத்தி வருகிறார்.இவரது கணவர் குமார், 2009ம் ஆண்டு இறந்து விட்டதால்தனியாக வசித்து வருகிறார். புயல் காரணமாக கடந்த 29ம் தேதி பிள்ளையார்குப்பத்தில் உள்ள தனது மகள் ராஜேஸ்வரி வீட்டிற்கு சென்று தங்கினார். கடந்த 3ம் தேதி மீண்டும் வாழைகுளத்தில் உள்ள தனது வீட்டிற்கு வந்தபோது, வீட்டின் உள்ளே இருந்த பொருட்கள் சில சிதறி கிடந்தன. அறையில் சென்று பார்த்த போது, அங்கிருந்த சீட்டு பணம் 1 லட்சம் ரூபாய், மூனரை சவரன் நகை உள்ளிட்ட பொருட்கள் மர்மநபர்களால் திருடப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து முத்தியால்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை