ஜிப்மர் ஒப்பந்த ஊழியர் தற்கொலை
புதுச்சேரி : ஜிப்மர் ஒப்பந்த ஊழியர் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.வில்லியனுார், சிவகணபதி நகர் ரோஜா வீதியைச் சேர்ந்தவர் சரவணன், 35; ஜிப்மர் கேண்டினில் ஒப்பந்த ஊழியர். சரவணன் கேண்டினில் இருந்து, லாண்டரி யூனிட்டுக்கு மாற்றப்பட்டார். அதிலிருந்து மன வருத்தத்தில் இருந்து வந்த அவர், நேற்று முன்தினம் மாலை துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது மனைவி சத்யாவதி கொடுத்த புகாரின் பேரில், வில்லியனார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.