மேலும் செய்திகள்
ஜி.ஹெச். டாக்டர் எண்ணிக்கை உயர்கிறது
19-Jan-2026
புதுச்சேரி: ஐ.என்.ஐ.எஸ்.எஸ்., தேர்வில், ஜிப்மர் முதுநிலை பயிற்சி டாக்டர், அகில இந்திய அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். ஜிப்மர் மகப்பேறியல் மற்றும் மகளிர் மருத்துவத் துறையின் முதுநிலை பயிற்சி மருத்துவர் விக்னேஷ் துரை. இவர், டில்லியில் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தால் நடத்தப்பட்ட தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனங்களின் சூப்பர் ஸ்பெஷாலிட்டி, (ஐ.என்.ஐ.எஸ்.எஸ்) தேர்வு ஜனவரி 2026ல், எம்.சி.எச். (மகளிர் மருத்துவ புற்றுநோயியல்) பாடத்திற்கான பிரிவில், அகில இந்திய அளவில் முதலிடம் பிடித்தார். இவர், எம்.பி.பி.எஸ்., பட்டத்தை சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லுாரியில் பயின்று, ஜிப்மரில் மகப்பேறியல் மற்றும் மகளிர் மருத்துவத்தில் எம்.எஸ்., பட்டம் பெற்று, ஜிப்மரில் தற்போது மகப்பேறியல் மற்றும் மகளிர் மருத்துவத் துறையில் முதுநிலை பயிற்சி டாக்டராக பணியாற்றி வருகிறார். தேசிய அளவில் முதலிடம் பிடித்த அவரை ஜிப்மர் இயக்குநர் மற்றும் பேராசிரியர்கள் பாராட்டி னர்.
19-Jan-2026