உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ஜிப்மரில் மே 1 ல் புற நோயாளி பிரிவு இயங்காது

ஜிப்மரில் மே 1 ல் புற நோயாளி பிரிவு இயங்காது

புதுச்சேரி:ஜிப்மர் மருத்துவமனையின் புற நோயாளி பிரிவுகள் மே 1 ஆம் தேதி இயங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜிப்மர் நிர்வாகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: மே 1 புத்த பூர்ணிமாவை முன்னிட்டு, மத்திய அரசு விடுமுறை அறிவித்துள்ளது. அதனையொட்டி, மே 1 ஜிப்மரில் புற நோயாளிகள் பிரிவுகள் இயங்காது. எனவே, அன்று நோயாளிகள் வருவதை தவிர்க்கவும். இருப்பினும், அவசரப்பிரிவு சேவைகள் அனைத்தும் வழக்கம் போல் இயங்கும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி