உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / வெளிநாட்டில் வேலை ரூ. 87லட்சம் மோசடி

வெளிநாட்டில் வேலை ரூ. 87லட்சம் மோசடி

புதுச்சேரி: வெளிநாட்டில் வேலை வாய்ப்பு உள்ளதாக கூறி புதுச்சேரி நபரிடம், ரூ. 87ஆயிரம் மோசடி கும்பல் ஏமாற்றியுள்ளது.புதுச்சேரி, வெங்கட்டா நகரை சேர்ந்த ேஷக் பாசித். இவர் வெளிநாட்டு வேலை வாய்ப்பு தொடர்பான விளம்பரத்தை ஆன்லைனில் பார்த்துள்ளார். இதையடுத்து, அதிலிருந்த மொபைல் எண்ணை வாட்ஸ் அப் மூலம் தொடர்பு கொண்டு பேசியபோது, எதிர்முனையில் பேசிய மர்ம நபர் சிங்கப்பூரில் வேலை வாய்ப்பு இருப்பதாகவும், அந்த வேலைக்கு விசா கட்டணம் செலுத்த வேண்டுமென கூறியுள்ளார்.இதைநம்பிய, ேஷக் பாசித் மர்ம நபருக்கு ரூ. 51 ஆயிரத்து 800 அனுப்பியுள்ளார். தொடர்ந்து, செயலாக்க கட்டணமாக கூடுதல் பணம் அனுப்பும்படி மர்ம நபர் தெரிவித்துள்ளார். இதையும் உண்மை என நம்பியேஷக் பாசித் 36 ஆயிரம் ரூபாய் அனுப்பியுள்ளார். ஆனால், அதன் பிறகு மர்ம நபரை தொடர்பு கொள்ள முடியவில்லை. அதன்பிறகே, மோசடி கும்பலிடம் மொத்தம் 87 ஆயிரத்து 800 ரூபாய்இழந்தது தெரியவந்தது.இதேபோல், வெங்கடா நகரை சேர்ந்த சாத்னா என்பவரை தொடர்பு கொண்ட மர்மநபர், வீட்டிலிருந்தபடி அதிக பணம் சம்பாதிக்கலாம் என கூறியுள்ளார். இதைநம்பிய சாத்னா 45 ஆயிரத்து 200 ரூபாய் செலுத்தி இழந்துள்ளார்.இதுகுறித்த புகாரின் பேரில் சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ