உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ஜோதி வள்ளலார் பள்ளி பிளஸ் 2 தேர்வில் சாதனை

ஜோதி வள்ளலார் பள்ளி பிளஸ் 2 தேர்வில் சாதனை

புதுச்சேரி: காலப்பட்டு ஜோதி வள்ளலார் மேல்நிலைப் பள்ளி பிளஸ் 2 பொதுத்தேர்வில் சிறந்த மதிப்பெண்கள் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளது.பிளஸ் 2 பொதுத்தேர்வில் பள்ளியளவில் யமுனா 588 மதிப்பெண்கள் பெற்று முதலிடமும், சபரிஷா 547 மதிப்பெண் பெற்று இரண்டாமிடமும், ஜீவிதா 543 மதிப்பெண் பெற்று மூன்றாமிடம் பெற்றுள்ளார். பள்ளியில் 500 மதிப்பெண்களுக்கு மேல் 14 மாணவர்கள் பெற்றுள்ளனர். பள்ளியில் மாணவிகள் யமுனா, மாணவர் ரோகன் ஆகியோர் கம்பியூட்டர் அப்ளிகேஷன் பாடத்தில் சென்டம் எடுத்துள்ளனர். யமுனா காமர்ஸ் பாடத்தில் சென்டம் எடுத்துள்ளார். பள்ளியில் 46 மாணவர்கள் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளனர். பள்ளியில் 80 சதவீதத்திற்கு மேல் 15 மாணவர்கள் மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளி தாளாளர் ராமலிங்கம், பள்ளி முதல்வர் சரஸ்வதி ஆகியோர் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ