கலா உத்சவ் போட்டி
புதுச்சேரி: மாவட்ட அளவிலான கலா உத்சவ் போட்டியில் நாடகம் மற்றும் பாரம்பரிய கதை சொல்லுதல் போட்டி நேற்று நடந்தது. புதுச்சேரி அரசின் பள்ளிக்கல்வி இயக்கத்தின் சமகர சிக் ஷா சார்பில், மாவட்ட அளவிலான கலா உத்சவ் போட்டி, கடந்த 5ம் தேதி ஜவகர் பால்பவனில் துவங்கியது. அதன் ஒரு பகுதியாக நேற்று நாடகம் மற்றும் பாரம்பரிய கதை சொல்லுதல் போட்டிகள் நடந்தது. இதில், மாணவர்கள், தனி நபர் மற்றும் குழுவாக பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.