உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / புதுச்சேரியில் கம்பன் விழா நிறைவு

புதுச்சேரியில் கம்பன் விழா நிறைவு

புதுச்சேரி: புதுச்சேரி கம்பன் கலையரங்கத்தில் நடந்து வந்த கம்பன் விழா நிறைவு பெற்றது.புதுச்சேரி கம்பன் கழகம் சார்பில், 58ம் ஆண்டு கம்பன் விழா புதுச்சேரி கம்பன் கலையரங்கில் கடந்த 9ம் தேதி துவங்கியது. மூன்று நாள் விழாவில், எழிலுரை, தனியுரை, கருத்தரங்கம், இளையோர் அரங்கம், வழக்காடு மன்றம், கவியரங்கம் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன. தொடர்ந்து இலங்கை ஜெயராஜ் தலைமையில் 'ஒப்பற்ற தியாகம் செய்தவர் இந்திரஜித்? மாரீசன்? கும்பகர்ணன்? என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடந்தது. முடிவில் ஒப்பற்ற தியாகம் செய்தவர் 'கும்பகர்ணன்' என, தீர்ப்பளிக்கப்பட்டது.தொடர்ந்து கம்பன் நிறைவு விழா நடந்தது. இதில் முதல் நாள் வழங்கப்பட்ட தீர்ப்புக்கு மேல்முறையீடு நடந்தது. இதில், தேசிய மனித உரிமைகள் ஆணைய தலைவர் ராமசுப்ரமணியன், பேராசிரியர் ஞானசுந்தரம், கலெக்டர் குலோத்துங்கன் ஆகியோர் நடுவர்களாக செயல்பட்டனர். இதில் மாது, பர்வீன் சுல்தானா, விஜயசுந்தரம், உமா தேவராஜன், விஜயகிருஷ்ணன் ஆகியோர் கலந்துகொண்டு பேசினர். முன்னாள் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி பேசுகையில், 'கும்பகர்ணனுக்கு உயிரை துறப்பதற்கு முன்னாள் தனக்கு கிடைத்த ஆட்சியை வேண்டாம் எனக்கூறி, இந்திரஜித்தை விட ஒருபடி உயர்ந்தார். இதனால் இலங்கை ஜெயராஜ் கொடுத்த தீர்ப்பு திருத்தப்பட வேண்டியதில்லை என, இறுதி தீர்ப்பளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ