உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / காரைக்கால் அம்மையார் பரமதத்தர் திருக்கல்யாணம்

காரைக்கால் அம்மையார் பரமதத்தர் திருக்கல்யாணம்

புதுச்சேரி : காரைக்கால் அம்மையார்- பரமதத்தர் திருக்கல்யாணம் நேற்று நடந்தது.காரைக்கால் அம்மையார் கோவிலில், மாங்கனி திருவிழா கடந்த 8ம் தேதி துவங்கி அன்று மாலை மாப்பிள்ளை அழைப்பு நடந்தது. நேற்று காரைக்கால் அமையார் - பரமதத்தர் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. இதில், அமைச்சர் திருமுருகன், நாஜிம் எம்.எல்.ஏ., டி.ஐ.ஜி. சத்தியசுந்தரம், கோவில் நிர்வாக அதிகாரி அருணகிரிநாதன், தனி அதிகாரி காளிதாசன் உள்ளிடடோர் கலந்து கொண்டனர்.இன்று அதிகாலை 3 மணிக்கு பிஷாடணமூர்த்தி மற்றும் பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. காலை பரமதத்தர் இரண்டு மாங்கனிகளை வீட்டிற்கு கொடுத்து அனுப்பும் நிகழ்ச்சியும். காலை 9:00 மணிக்கு பரமசிவன் அடியார் கோலத்துடன் பவழக்கால் விமானத்தில் சுவாமி வீதியுலா நடக்கிறது. அப்போது, பக்தர்கள் தீபாராதணை செய்து, மாங்கனி வீசும் உற்சவம் நடக்கிறது. விழாவையொட்டி, 30 டன் மாம்பழங்கள் விற்பனைக்கு வந்துள்ளது.

உள்ளூர் விடுமுறை

மாங்கனி திருவிழாவை முன்னிட்டு காரைக்கால் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை ஈடு செய்ய வரும் 19ம் தேதி வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை சார்பு செயலர் கிரண் பிறப்பித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை