உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / காரைக்கால் கிரைம் செய்திகள்

காரைக்கால் கிரைம் செய்திகள்

விழுந்த நபர் மீட்பு: காரைக்கால் பகுதியை சேர்ந்தவர் திருப்பதி, 45. இவர், நேற்று முன்தினம் இரவு மது போதையில் இருந்தபோது, பி.கே. சாலையில் உள்ள கழிவுநீர் வடிகாலில் தவறி விழுந்தார். அவர், வடிகாலுக்குள் சிக்கி, வெளியே வர முடியாமல் தவித்தார். தகவலறிந்த காரைக்கால் தீயணைப்பு நிலைய வீரர்கள், சம்பவ இடத்திற்கு விரைந்து, நீண்ட நேரப் போராட்டத்திற்கு பின், திருப்பதியை பத்திரமாக மீட்டனர். அவரை, தீயணைப்பு வீரர்கள் மீட்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. நபர் சாவு: திருநள்ளாறு அம்பகரத்துார், ரயில்வே பாலத்தில் நேற்று முன்தினம் உடல்நலக்குறைவு காரணமாக மயங்கிக் கிடந்த அம்பகரத்துார், கல்லடித் தெருவைச் சேர்ந்த நாகேந்திரகுமார், 38, என்பவரை, திருநள்ளாறு போலீசார் மீட்டு, மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர், இறந்தார். இது குறித்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். 2 வாலிபர்கள் கைது: காரைக்கால், பாரதியார் சாலையில், நேற்று முன்தினம் மதுபோதையில் ரகளையில் ஈடுபட்ட சுப்புராய முதலியார் தெருவைச் சேர்ந்த விஷ்வா, 23, என்பவர் மீது நகர போலீசார் வழக்குப் பதிந்து, கைது செய்தனர். அதே போல், கோட்டுச்சேரி பூவம் பகுதியில் நேற்று முன்தினம் மதுபோதையில் ரகளையில் ஈடுபட்ட அதேப் பகுதியை சேர்ந்த மணிகண்டன், 31, என்பவரை கோட்டுச்சேரி போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை