மேலும் செய்திகள்
தோல்விக்கு பொறுப்பேற்று காங்., தலைவர் ராஜினாமா
07-May-2026
காரைக்கால்: புதுச்சேரி மாநில காங்., தலைவர் பதவியை ராஜினாமா செய்த நிலையில் ,காரைக்கால் மாவட்ட தலைவர் தனது பதவியை ராஜினாமா செய்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. புதுச்சேரி மாநிலத்தின் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் புதுச்சேரி மற்றும் காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் காங்., படுதோல்வி அடைந்தது. இதனால் தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று மாநில தலைவர் வைத்திலிங்கம் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனை தொடர்ந்து காரைக்கால் மாவட்ட காங்., தலைவராக இருந்த சந்திரமோகன் தனது மாவட்ட தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். இது குறித்து அவர் காரைக்கால் மாவட்ட காங்., மற்றும் மக்களின் நலனுக்காக என் பணியை சிறப்பாக செய்த நிலையில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் காங்., தோல்விக்கு முழு பொறுப்பேற்று , மாவட்ட தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ளதாக தெரிவித்துள்ளார். ் வைத்திலிங்கம் தனது பதவியை ராஜினாமா செய்ததை தொடர்ந்து சந்திரமோகன் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளது காங்., வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
07-May-2026