உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  காரைக்கால் மீனவர்கள் திரும்பினர்

 காரைக்கால் மீனவர்கள் திரும்பினர்

காரைக்கால்: புதுச்சேரி, காரைக்கால், கோட்டுச்சேரிமேடு மீனவ கிராமத்தை சேர்ந்த சிவராமன் என்பவரது விசைப்படகில் கடந்த அக்., 7ம் தேதி மீனவர்கள் ராஜேஷ், குணசேகரன், ஸ்ரீராம், செல்வகுமார், ஞானவேல், முருகானந்தம் உள்ளிட்ட காரைக்கால், தமிழகத்தை சேர்ந்த 17 மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். கோடியகரைக்கு தென்கிழக்கு மீன்பிடித்து கொண்டிருந்தபோது, இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். அதேபோல் கடந்த செப்., 28ம் கோட்டுச்சேரி மீனவ கிராமத்தை சேர்ந்த செல்வம் என்பவது விசைப்படகில் 12 மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர். அவர்களையும் இலங்கை கடற்படை கைது செய்தது. கைது செய்யப்பட்ட 29 மீனவர்கள் இலங்கை, திரிகோணமலை நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைக்கப்பட்டனர். கடந்த 11ம் தேதி இலங்கை நீதிமன்றம், 26 மீனவர்களை, நிபந்தனைகளுடன் விடுதலை செய்து உத்தரவிட்டது. மேலும் மூன்று காரைக்கால் மீனவர்கள் ஏற்கனவே இலங்கை கடற்படை யால் கைது செய்யப் பட்டு, இரண்டாவது முறையாக மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளதால் அவர்களுக்கு தலா ஆறு மாத சிறை தண்டனை, ரூ.11.65 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. அதை யடுத்து, அவர்கள் மூவரும் சிறையில் அடைக்கப்பட்டனர். விடுதலை செய்யப்பட்ட 26 மீனவர்கள் நேற்று முன்தினம் விமானம் மூலம் சென்னைக்கு வந்தனர். அவர்கள், மீன் வளத்துறை சார்பில் காரைக்கால் அழைத்து வரப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்