உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / காரைக்கால் புதிய கலெக்டர் பொறுப்பேற்பு

காரைக்கால் புதிய கலெக்டர் பொறுப்பேற்பு

காரைக்கால்: காரைக்கால் மாவட்ட புதிய கலெக்டராக சோம சேகர் அப்பாராவ் நேற்று பொறுப்பேற்றார்.காரைக்கால் மாவட்ட கலெக்டராக பணியாற்றிய மணிகண்டன், புதுச்சேரி கவர்னரின் செயலராக நியமிக்கப்பட்டார். அதையடுத்து, புதுச்சேரி சுற்றுலா மற்றும் மீனவர் நலத்துறை செயலராக பணியாற்றிய சோம சேகர் அப்பாராவ் காரைக்கால் கலெக்டராக நியமிக்கப்பட்டார். நேற்று, அவர் பொறுப்பேற்றார். அவரிடம், பழைய கலெக்டர் மணிகண்டன் பொறுப்புகளை ஒப்படைத்தார்.புதிய கலெக்டர் சோம சேகர் அப்பாராவ் கூறுகையில், காரைக்கால் மாவட்ட வளர்ச்சி திட்டங்கள் விரைவாக செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். சுற்றுலாவை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.அரசின் திட்டங்கள் அனைத்தும் செயல்படுத்தப்படும் என, தெரிவித்தார். புதிய கலெக்டருக்கு பல்வேறு துறை அதிகாரிகள் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை