உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / அஸ்மிதா கேலோ போட்டி காரைக்கால் மாணவர்கள் சாதனை

அஸ்மிதா கேலோ போட்டி காரைக்கால் மாணவர்கள் சாதனை

காரைக்கால்: புதுச்சேரியில் நடந்த மாநில அளவிலான அஸ்மிதா கேலோ போட்டியில் காரைக்கால் மாணவர்கள் வெற்றி பெற்றனர். புதுச்சேரி முத்துரத்தினம் அரங்கம் மேல்நிலைப் பள்ளியில் புதுச்சேரி விளையாட்டு அகாடமி மற்றும் பென்காக் சிலாட் அசோசியேஷன் இணைந்து நடத்திய ஏழாவது மாநில அளவிலான அஸ்மிதா கேலோ இந்தியா 2025-26 போட்டி நடந்தது. இப்போட்டியில் காரைக்கால் ஜோபாய் மார்ஷியல் ஆர்ட்ஸ் அகாடமி மற்றும் காரைக்கால் பென்காக் சிலாட் அசோசியேஷன் சார்பில் பங்கேற்ற மாணவிகள் 3 தங்கம், 8 வெள்ளி. 2 வெண்கலப் பதக்கங்கள் வென்றனர். மாநில அளவிலான போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்கள், அமைச் சர் திருமுருகனை சந்தித்து வாழ்த்து பெற்றனர். அப்போது, ஜோபாய் மார்ஷியல் ஆர்ட்ஸ் அகாடமி நிறுவனர் தேவிதயாள். தலைவர் தமிழ்வாணன்.மற்றும் பயிற்சியாளர் கிருஷ்ணமூர்த்தி உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ