மேலும் செய்திகள்
போலீஸ் எஸ்.ஐ.,க்கள் பணியிட மாற்றம்
04-Oct-2024
புதுச்சேரி : காரைக்காலில் பணியாற்றிய 95 தொடக்க பள்ளி ஆசிரியர்கள் புதுச்சேரிக்கு இடமாற்றம் செய்யப்பட்டனர்.பள்ளி கல்வித்துறையில் நேற்று முன்தினம் 131 தொடக்க பள்ளி ஆசிரியர்கள் தேர்வு செய்து பணி ஆணை வழங்கப்பட்டது. இதில், 114 பேர் காரைக்காலுக்கும், 17 பேர் மாகிக்கு நியமிக்கப்பட்டனர்.இதனால் கடந்த ஆண்டு புதுச்சேரியில் இருந்து காரைக்காலுக்கு இடமாற்றம் செய்யப்பட்ட தொடக்க பள்ளி ஆசிரியர்களில் 95 பேர் புதுச்சேரிக்கு இடமாற்றம் செய்யப்பட்டனர். 12 பேர் காரைக்கால் மாவட்ட பள்ளிகளுக்குள்ளேயும், ஒரு ஆசிரியர் புதுச்சேரிக்குள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான ஆணையை பள்ளி கல்வித்துறை இணை இயக்குநர் வெர்பினா ஜெயராஜ் வெளியிட்டுள்ளார்.
04-Oct-2024