மேலும் செய்திகள்
சைனிக் பள்ளியில் சிறப்பு நிகழ்ச்சி
21-Jul-2025
புதுச்சேரி : புதுச்சேரி மூலகுளம் அமிர்த வித்யாலயம் பள்ளி மாணவர்கள் கராத்தே மற்றும் குமிட்டே பிரிவுகளில் பங்கேற்று பல பதக்கங்களை வென்று, சாம்பியன்ஷிப் பட்டத்தை கைப்பற்றினர். புதுச்சேரி மூலகுளம் சிட்டோ ஸ்கூல் சார்பில், தேசிய அளவிலான ஓபன் கராத்தே சாம்பியன்ஷிப் போட்டி லாஸ்பேட் மல்டி பர்ப்பஸ் இண்டோர் ஸ்டேடியத்தில் நடந்தது. இப்போட்டியில் புதுச்சேரியில் இருந்த பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த 750க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்று விளையாடினர். அதில் புதுச்சேரி மூலகுளம் அமிர்த வித்யாலயம் பள்ளி மாணவர்கள் கராத்தே மற்றும் குமிட்டே பிரிவுகளில் பதக்கங்களை வென்று, சாம்பியன்ஷிப் பட்டத்தை கைப்பற்றினர். பரிசளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினர்களாக சபாநாயகர் செல்வம், அங்குதாஸ் ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு சாம்பியின் ஷிப் பட்டம் மற்றும் பதக்கங்களை வழங்கி வாழ்த்தினர்.
21-Jul-2025