உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  கராத்தே போட்டி ஆலோசனை கூட்டம்

 கராத்தே போட்டி ஆலோசனை கூட்டம்

புதுச்சேரி: புதுச்சேரி கோஜூ காய் கராத்தே பள்ளி சார்பில் 46வது மாநில அளவிலான கராத்தே போட்டியை நடத்துவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் ஹோட்டல் ஜெயராமில் நடந்தது. கூட்டத்திற்கு, மூத்த கராத்தே நிபுணரும், சர்வதேச நடுவருமான ஜோதிமணி தலைமை தாங்கினார். கோஜூ ரியூ கராத்தே சங்க செயலாளர் சுந்தரராஜன், ஆசிய கராத்தே நடுவர் அழகப்பன், மூத்த பயிற்சியாளர் மதிஒளி முன்னிலை வகித்தனர். மூத்த பயிற்சியாளர்கள் குமரன், கண்ணன், ஜவஹர், பயிற்சியாளர்கள் சுனிதா பிரியதர்ஷினி, கார்குழலி, முத்துகுமார், கெஜலட்சுமி, பிரனவ், நவனீஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில், வரும் ஜனவரி மாதம் கோர்க்காடு வெங்கட்டரங்கன் பெயரில் 46வது மாநில அளவிலான கராத்தே போட்டியை சிறப்பாக நடத்துவது குறித்து முடிவு செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி