மேலும் செய்திகள்
மாநகரில் இன்றைய சிறப்பு நிகழ்ச்சிகள்
24-Nov-2024
புதுச்சேரி: சர்வதேச கர்லா கட்டை தினத்தை முன்னிட்டு, கர்லா கட்டை சாதனை நிகழ்வு இன்று 12ம் தேதி நடக்கிறது. ஜோதி சிலம்பம் சத்ரிய குருகுலம் சார்பில், சர்வதேச கர்லாகட்டை தினத்தை முன்னிட்டு, உலக சாதனை நிகழ்வு புதுக்குப்பம் கடற்கரையில் இன்று 12ம் தேதி நடக்கிறது. காலை 8:00 மணி முதல் 9:00 மணி வரை, கர்லா கட்டை மெய்பாடம் பிரிவின் கீழ் 200 பேர் ஒரே நேரத்தில் பங்கேற்று கர்லா கட்டை சுற்றும் நிகழ்வு நடக்கிறது.தொடர்ந்து, மதியம் 2:30 மணி முதல் மாலை 5:00 மணி வரை, புதுச்சேரி கடற்கரையில் தனி பிரிவின் கீழ் சுருள் கத்தி தொடர்ச்சியாக 30 நிமிடம் சுற்றும் சாதனை நிகழ்வு உட்பட பல்வேறு சாதனை நிகழ்ச்சிகள் நடக்கிறது. இதனை ஈச் உலக சாதனை அமைப்பின் நிறுவனர் தமிழ்வாணன் பதிவு செய்கிறார். ஏற்பாடுகளை ஜோதி சிலம்பம் சத்ரிய குருகுலம் ஜோதிசெந்தில் கண்ணன் தலைமையிலான நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.
24-Nov-2024