உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கருணீகர் சங்க பொதுக்குழு கூட்டம்

கருணீகர் சங்க பொதுக்குழு கூட்டம்

புதுச்சேரி: புதுச்சேரி மாநில கருணீகர் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம், தட்டாஞ்சாவடி சுப்பையா திருமண நிலையத்தில் நடந்தது. சங்கத்தின் தலைவர் நடனசபாபதி தலைமை தாங்கிப் பேசினார். சங்கத்தின் செயலாளர் சுந்தரமூர்த்தி வரவேற்றார். புதிய நிர்வாகிகளை தேர்ந்தெடுக்க வேண்டிய அவசியம் குறித்து பேசினார். தேர்தல் அதிகாரிகளாக கிருஷ்ணமூர்த்தி மற்றும் உலகநாதன் ஆகியோர் செயல்பட்டு, புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யும் பணியில் ஈடுபட்டனர்.மேலும், பொதுக்குழு உறுப்பினர்களின் ஒப்புதலுடன் புதிதாக மகளிர் அணி, சட்ட ஆலோசகர், செய்தி தொடர்பாளர் போன்ற புதிய பதவிகள் உருவாக்க சட்ட திருத்தம் செய்யப்பட்டது. இதில், புதிய தலைவராக மீண்டும் நடன சபாபதி, செயலாளராக ராஜாராம், பொருளாளராக முத்துக்குமரன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். தொடர்ந்து, கூட்டத்தில் கருணீகர் சாதியை மத்திய அரசின் இதர பிற்பட்ட வகுப்பில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வில்லியனுாரில் உள்ள கருணீகர் சங்க இடத்தை ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து கைப்பற்றி தர வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. செயற்குழு உறுப்பினர் மணிவாசகம் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை