வாசகர்கள் கருத்துகள் ( 1 )
சிறப்பு மருத்துவர்கள் முன்னெடுப்பு சிறப்பு மிக்கதாக இருக்கிறது
நோயாளிகளின் அச்சத்தை போக்கபொதுவாக மருத்துவமனைகளில், அறுவை சிகிச்சை கூடத்திற்கு அழைத்து செல்லப்படும் நோயாளிகள், அங்குள்ள சூழலை கண்டதும் ஒருவித அச்ச உணர்வுக்கு ஆளாவார். பலருக்கு உயர் ரத்த அழுத்தம் ஏற்படும். இதனால், அறுவை சிகிச்சை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்படும்.இதுபோன்ற சூழலை தவிர்க்க, பிரபல தனியார் மருத்துவமனை நிர்வாகங்கள், அறுவை சிகிச்சை கூடங்களில், இசை மற்றும் பாடல்களை ஒலிக்க செய்து, அறுவை சிகிச்சை மேற்கொள்கின்றன.அதனை பின்பற்றி புதுச்சேரி அரசு, கதிர்காமம் இந்திராகாந்தி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் ரூ.10 கோடி செலவில் அமைத்து வரும் 11 அறுவை சிகிச்சை கூடங்களில், 2 அறுவை சிகிச்சை கூடங்கள் இயற்கை சுவரோவியங்களுடன் அமைத்து வருகிறது. இந்த அறுவை சிகிச்சை கூடங்கள் வரும் ஆகஸ்ட் மாதத்திற்குள் செயல்பாட்டிற்கு கொண்டு வரப்பட உள்ளது.இந்த மருத்துவமனையில் ஏற்கனவே கீழ் தளத்தில் 9 அறுவை சிகிச்சை கூடங்கள் உள்ளன. தற்போது, நான்காம் தளத்தில் 11 அறுவை சிகிச்சை கூடங்கள் புதிதாக அமைக்கப்பட்டு வருகிறது. இதில் மூன்று அறுவை சிகிச்சை கூடங்கள் இருதயம், சிறுநீரகம் உள்ளிட்ட உறுப்பு மாற்று சிகிச்சைக்காக தயாராகி வருகிறது. மற்றவை, முட நீக்கியல், நரம்பியல், மகப்பேறு, கண், காது, மூக்கு உள்ளிட்ட பல்வேறு அறுவை சிகிச்சைக்கான கூடமாக தயாராகி வருகிறது.
சிறப்பு மருத்துவர்கள் முன்னெடுப்பு சிறப்பு மிக்கதாக இருக்கிறது