மேலும் செய்திகள்
கட்டாய 'ஹெல்மெட்' போலீசார் தீவிர சோதனை
20-Jan-2025
திருக்கனுார்: காட்டேரிக்குப்பம் போலீசார் கட்டாய ஹெல்மெட் வாகன சோதனையில் ஈடுபட்டு, வாகன ஓட்டிகளுக்கு அறிவுரை வழங்கினர்.புதுச்சேரியில் இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் கட்டாயம் அணியும் சட்டம் கடந்த 12ம் தேதி முதல் அமலுக்கு வந்தது. இதற்கிடையே, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஹெல்மெட் கெடுபிடி சற்று தளர்த்தப்பட்டன.இந்நிலையில், பொங்கல் பண்டிகை முடிந்ததையொட்டி, ஹெல்மெட் கட்டாயம் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.அதன்படி, காட்டேரிக்குப்பம் போலீஸ் எல்லைக்குட்பட்ட குமாரப்பாளையம் மெயின் ரோட்டில் இன்ஸ்பெக்டர் ராஜகுமார் தலைமையில் சப் இன்ஸ்பெக்டர் தமிழரசன், லுார்து நாதன், ஜானகிராமன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது, இருசக்கர வாகனங்களில் ஹெல்மெட் அணியாமல் வந்தவர்களை தடுத்து நிறுத்தி, ஹெல்மெட் அவசியம் குறித்து அறிவுரை வழங்கினர். இனி ஹெல்மெட் அணியாமல் வந்தால், அபராதம் விதிக்கப்படும் என, எச்சரிக்கை விடுத்தனர்.
20-Jan-2025