கவியரசு கண்ணதாசன் 98வது பிறந்தநாள் விழா
புதுச்சேரி: கவியரசு கண்ணதாசன் இலக்கியக் கழகத்தின் 13ம் ஆண்டு விழா மற்றும் கவியரசு கண்ணதாசனின் 98வது பிறந்தநாள் விழா ஜெயராம் ஓட்டலில் நடந்தது.கவியரசு கண்ணதாசன் இலக்கியக் கழகத்தின் தலைவர் தேவதாசு தலைமை தாங்கினார். செயலர் அருள்செல்வம் வரவேற்றார்.துணைத் தலைவர் கோதண்டராமன், பொருளாளர் வீரட்டீஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இலக்கிய கழகத்தின் நிறுவனர் கோவிந்தராசு துவக்க உரையாற்றினர்.சிறப்பு அழைப்பளராக புதுச்சேரி மாவட்ட நுகர்வோர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி அசோகன், தமிழறிஞர்களுக்கு விருது வழங்கி பாராட்டுரை வழங்கினார். தலைமை ஆசிரியர் ஓய்வு பாவாடை, புதுக்கோட்டை திருமலை சேகர், சென்னை காவேரி மைந்தன் ஆகியோருக்கு கண்ணதாசன் விருது வழங்கப்பட்டது. தமிழ்பணிச் செம்மல் விருதினை சங்கர், மண்ணாங்கட்டி, பத்மநாபன், குமரவேலு ஆகியோர் பெற்றனர்.'காலந்தோறும் கண்ணதாசன்' என்ற தலைப்பில் மகேந்திரன் சிறப்புரையாற்றினார். சிங்கப்பூர் தமிழறிஞர் வெங்கடேசன், புதுச்சேரி பல்கலைக்கழகம் பேராசிரியர் ரவிக்குமார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செந்தில்குமார், ராமதாசுகாந்தி, கலைவாணி பாண்டியன், ஆளவந்தார் சித்தர், கலைவாணி சதீஷ் ஆகியோர் செய்திருந்தனர்.இலக்கிய கழகச் இணைச் செயலர் கஜேந்திரன் நன்றி கூறினார்.