மேலும் செய்திகள்
மாநகரில் இன்றைய சிறப்பு நிகழ்ச்சிகள்
04-May-2025
மாவட்ட கிரிக்கெட் அணிக்குநாளை வீரர்கள் தேர்வு
16-Apr-2025
புதுச்சேரி: கேலோ இந்தியா பீச் வாலிபால் போட்டியில் பங்கேற்க, புதுச்சேரி வீரர்களுக்கான தகுதி தேர்வு நாளை (7 ம் தேதி) முதல் 9ம் தேதி வரை நடக்கிறது.கேலோ இந்தியா கடற்கரை விளையாட்டு திருவிழா வரும் 19ம் தேதி முதல் 24ம் தேதிவரை டாமன் டையூவில் நடைபெறுகிறது. இதில் பீச் வாலிபால் மற்றும் செபக்டக்ரா போட்டிகளில் புதுச்சேரி மாநிலம் சார்பில் பங்கேற்பதற்கு வீரர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.பீச் வாலிபால் போட்டிக்கு ஆண் மற்றும் பெண் இரு பிரிவிலும் தலா 2 அணிகளுக்கு 4 வீரர்களும், செபக்டக்ரா போட்டிக்கு ஆண்கள் பிரிவில் ஒரு அணிக்கு மூன்று வீரர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதில் செபக்டக்ரா போட்டிக்கான தகுதி தேர்வு முகாம் நாளை (7ம் தேதி) மாலை 3:00 மணிக்கு, முத்திரையர்பாளையத்தில் உள்ள முத்தரையர் மேல்நிலைப் பள்ளியில் நடக்கிறது.பீச் வாலிபால் போட்டிக்கான தகுதி தேர்வு லாஸ்பேட்டை, பல்நோக்கு உள் விளையாட்டரங்கில் நடக்கிறது. அதில், ஆண்கள் பிரிவு வரும் 8 ம் தேதி காலை 9:00 மணிக்கும், பெண்கள் பிரிவிற்கு வரும் (9ம் தேதி) காலை 9:00 மணிக்கு நடக்கிறது.இப்போட்டிகளில் பங்கேற்க தகுதியும், திறமையும் உள்ளவர்கள் ஆதார் கார்டு, பாஸ்போர்ட், மாணவராக இருப்பின் நற்சான்றிதழ், அரசு துறைகளில் பணி புரிபவராக இருந்தால், அதற்கான சான்றுகளுடன் தகுதி தேர்வில் பங்கேற்கலாம். இத்தகவலை விளையாட்டு துறை துணை இயக்குநர் வைத்தியநாதன் தெரிவித்துள்ளார்.
04-May-2025
16-Apr-2025