முதல்வரிடம் மழலையர்கள் வாழ்த்து
புதுச்சேரி : சர்வதேச பெண் குழந்தைகள் தினத்தையொட்டி, முதல்வரிடம் மழலையர்கள் வாழ்த்து பெற்றனர்.சர்வதேச பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு புதுச்சேரி தந்தை பெரியார் நகர், நியூ லிட்டில் கிட்ஸ் மழலையர் பள்ளி பெண் குழந்தைகள் மற்றும் தன்னம்பிக்கை பொம்மலாட்ட கலைக்குழுவினர் முதல்வர் ரங்கசாமியை சந்தித்து மலர் கொத்துக்கள் வழங்கி வாழ்த்து பெற்றனர்.தன்னம்பிக்கை பொம்மலாட்ட கலைக்குழு நிறுவனர் எலிசபெத் ராணி, புதுச்சேரியில் பெண் குழந்தைகளுக்கு செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு நலத்திட்டங்கள் குறித்து விவரித்தார். புதுச்சேரி ஒருங்கிணைந்த கோஜூரியோ கராத்தே சங்க மாநிலச் செயலாளர் சுந்தர்ராஜன் உடனிருந்தார்.