மேலும் செய்திகள்
ஜாமினில் வந்தவர் கத்தியுடன் கைது
09-May-2025
புதுச்சேரி: முருங்கப்பாக்கத்தில் கத்தி வைத்திருந்த நபரை போலீசார் கைது செய்தனர்.முதலியார்பேட்டை, சப் இன்ஸ்பெக்டர் ஜெயபிரகாஷ் மற்றும் போலீசார் முருங்கப்பாக்கம் சந்திப்பில் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அங்கு பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் நின்றவரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அதில், முருங்கப்பாக்கத்தை சேர்ந்த பன்னீர்செல்வம், 24, என்பது தெரியவந்தது. அவர் மறைத்து வைத்திருந்த கத்தியை, போலீசார் பறிமுதல் செய்தனர். இவர் மீது மங்கலம் போலீசில் கொலை முயற்சி வழக்கு உள்ளது. அவரை கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி நேற்று சிறையில் அடைத்தனர்.
09-May-2025