உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / செங்கழுநீர் அம்மன் கோவில் கும்பாபிஷேகம்

செங்கழுநீர் அம்மன் கோவில் கும்பாபிஷேகம்

புதுச்சேரி: பெரிய காலாப்பட்டு செங்கழுநீர் அம்மன் கோவிலில் மகா கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. காலாப்பட்டு தொகுதிக்கு உட்பட்ட பெரிய காலாப்பட்டு செங்கழுநீர் அம்மன் கோவிலில் மகா கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. இதையொட்டி, யாகசாலை பூஜைகள் முடிவடைந்து, கோவில் கோபுரத்தில் புனிதநீர் ஊற்றப்பட்டது. தொடர்ந்து, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது. கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ., மற்றும் திரளான பொதுமக்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி