உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  கும்பாபிஷேகம் விழா

 கும்பாபிஷேகம் விழா

நெட்டப்பாக்கம்: நெட்டப்பாக்கம் முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிேஷகம் நேற்று நடந்தது.நெட்டப்பாக்கம் மேட்டுத் தெரு பகுதியில் அமைந்துள்ள முத்துமாரியம்மன் கோவில் புதுப்பிக்கப்பட்டு கும்பாபி ேஷகம் விழா கடந்த 29ம் தேதி கணபதி பூஜையுடன் துவங்கியது. 30ம் தேதி முதல்கால பூஜை நடந்தது. நேற்று முன்தினம் காலை இரண்டாம் கால யாக பூஜை, மாலை மூன்றாம் கால யாக பூஜை நடந்தது. நேற்று காலை 9:30 மணிக்கு கடம் புறப்பாடு, 9:50 மணிக்கு முத்தமாரியம்மன் விமான கும்பாபிேஷகம், 10:15 மணிக்கு மூலவர், பரிவார தெய்வங்களுக்கு கும்பாபி ேஷகம் நடந்தது. விழாவில் துணை சபாநாயகர் ராஜவேலு உட்பட திரளான கிராம மக்கள் தரிசனம் செய்தனர். இரவு சுவாமி வீதியுலா நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி