உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பெரியபாளையத்தம்மன் கோவிலில் 8 ம் தேதி கும்பாபிேஷகம்

பெரியபாளையத்தம்மன் கோவிலில் 8 ம் தேதி கும்பாபிேஷகம்

புதுச்சேரி; புதுச்சேரி அண்ணா சாலையில் அமைந்துள்ள பெரியபாளையத்தம்மன் கோவில் புதுப்பிக்கப்பட்டது. அதனையொட்டி வரும் 8ம் தேதி கும்பாபிேஷகம் நடக்கிறது.இதற்கான பூர்வாங்க பூஜை இன்று காலை விக்னேஸ்வர பூஜை, மகா கணபதி ேஹாமத்துடன் துவங்குகிறது. தொடர்ந்து மகாலட்சுமி ேஹாமம், நவக்கிரக ேஹாமம், புதிய விக்ரகங்கள் மற்றும் கோபுர கலசங்கள் கரிகோலம் நடக்கிறது. மாலை யாகசாலை பூஜை தொடங்குகிறது. நாளை 7ம் தேதி இரண்டு மற்றும் மூன்றாம் கால யாக பூஜைகள் நடக்கிறது.நாளை மறுநாள் 8ம் தேதி காலை 7:00 மணிக்கு வேதபாராயணத்தை தொடர்ந்து நான்காம் கால யாக பூஜை நடக்கிறது. அதில், நாடிசந்தானம், தத்வார்ச்சனை, ஸ்பர்சாஹூதி, விசேஷத்திரவ்யாஹூதி, மூலமந்திர ேஹாமம்,. அஸ்த்ரா ேஹாமம், பூர்ணாஹூதி, யாத்ராதானத்தை தொடர்ந்து காலை 10:15 மணிக்கு கடம் புறப்படாகி, 10:30 மணிக்கு விமான கும்பாபிேஷகம் நடக்கிறது.காலை 11:00 மணிக்கு விநாயகர், முருகன், பெரியபாளையத்தம்மன், துளசியம்மன், பரசுராமர் மற்றும் நவக்கிரகங்களுக்கு மகா கும்பாபிேஷகம் மற்றும் தீபாராதனை நடக்கிறது. இரவு அம்மன் வீதியுலா நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !