உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / 10ம் வகுப்பு மதிப்பெண் பதிவு செய்ய தொழிலாளர் துறை அறிவுறுத்தல்

10ம் வகுப்பு மதிப்பெண் பதிவு செய்ய தொழிலாளர் துறை அறிவுறுத்தல்

புதுச்சேரி : பத்தாம் வகுப்பு மதிப்பெண்ணை மாணவர்கள் மொபைல் ஆப் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.தொழிலாளர் துறை அரசு செயலர் யாஷம் லட்சுமி நாராயண ரெட்டி செய்திக்குறிப்பு:புதுச்சேரி அரசு, தொழிலாளர் துறை, வேலை வாய்ப்பு அலுவலகம், 2024--25ம் கல்வி ஆண்டில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களின் மதிப்பெண் சான்றிதழ்கள் பள்ளி கல்வி இயக்ககத்தின் மூலம் பெறப்பட்டு, அவை தேசிய தகவல் தொழில்நுட்பம் மைய உதவியுடன் மொபைல் போன் செயலி உதவியுடன் பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.பத்தாம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழ் பெற்ற மாணவர்கள் இந்த மொபைல் ஆப்பை பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி கொள்ளலாம். பத்தாம் வகுப்பு (ஸ்டேட் போர்டு) மாணவர்கள் தங்கள் அசல் மதிப்பெண் சான்றிதழ் பெற்ற பிறகு, மொபைல் ஆப்பை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்யும்படி கேட்டுக்கொள்கிறோம்.புதுச்சேரி மற்றும் காரைக்கால் பிராந்தியத்தில் உள்ள பத்தாம் வகுப்பு சி.பி.எஸ்.இ., ஸ்டேட் போர்டு மாணவர்கள் தங்களின் அசல் மதிப்பெண் சான்றிதழ் பெற்ற பிறகு, வேலைவாய்ப்பு பதிவிற்காக வேலைவாய்ப்பு அலுவலகத்தை நேரில் அணுக வேண்டாம். (https://labour.py.gov.in) https://ee.py.gov.in) இந்த மொபைல் ஆப் லிங்கை பயன்படுத்தி மாணவர்கள் தங்களது கல்வி தகுதியை பதிந்து வேலைவாய்ப்பு அடையாள அட்டையை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை